பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: குற்றப் பார்வை (VIDEO)
நாட்டில் ஒவ்வொரு நாளும் பல குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணமேவுள்ளது. இந் நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் காணாமல் போன 15 வயது சிறுமியை டிபாலிஸார் மீட்டுள்ளதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற 42 வயதுடைய நபரையும் நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அநுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இராணுவ சிப்பாய் ஒருவரையும் நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியை வாகனத்தில் கடத்த முற்பட்ட இளைஞர்களை மடக்கிப் பிடித்த மக்கள் பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 16 வயது சிறுவர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இவ்வாறு இலங்கையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள்,மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட தகவல்களை தொகுத்து வழங்கும் எமது குற்றப் பார்வை நிகழ்ச்சி.



