பிள்ளைகள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
பிள்ளைகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றுவது அதிகரித்துள்ளதாக றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுள்ள அவர், கொரோனா வைரஸ் தொற்று பிள்ளைகள் மத்தியில் பரவுவதை கடந்த சில தினங்களாக அதிகளவில் காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், பெற்றோர்கள், பிள்ளைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து, பாடசாலை கட்டமைப்புகள் தொடர்ந்தும் இயங்க உதவ வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவல் பிள்ளைகளுக்கு மத்தியில் தொடர்ந்தும் அதிகரித்தால், பாடசாலைகளை மூட நேரிடும். இதனால், பிள்ளைகள் தமது கல்வியை இடைவிடாது தொடர்வதற்கு மக்கள் உதவ வேண்டும். பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளின் கல்வியை பாதுகாப்பதற்காக அவசியமற்ற பயணங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுப்பதாக மருத்துவர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 1 நாள் முன்

உக்ரைனுக்கு அடுத்து இந்த நாடுதான் ரஷ்யாவின் இலக்கு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri

கேட் மிடில்டன் தமது பிள்ளைகளுக்கு விதித்துள்ள கடுமையான ஒரு சட்டம்: மூவரும் மீறுவதில்லையாம் News Lankasri
