சிறுவர்களிடையே அதிகரிக்கும் ஆபத்து
சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம்(Vaasan Ratnasingham) இதனை அறிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லை.
மேலும், மாணவர்களின் இணை பாடவிதான செயற்பாடுகள் மற்றும் உடற்பயிற்சி முறைமைகள் குறித்தும் கல்வி அமைச்சுடன் எங்களது கருத்துக்களைப் பரிமாறியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
