இரு மடங்காக அதிகரிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான கொடுப்பனவு
வைத்தியர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி கொடுப்பனவு 70,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த கொடுப்பனவு 35,000 ஆக இருந்தது.
அத்துடன் பல்கலைக்கழக ஆசிரியர்களின் படிப்புக்கான கொடுப்பனவிலும்; 25 வீத அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாழ்க்கை செலவு
இந்த அதிகரிப்பு அவர்களின் ஜனவரி மாத சம்பளத்தில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவிருந்த 10 ஆயிரம் ரூபாய் வாழ்க்கை செலவு கொடுப்பனவில் 5000 ரூபாய் ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam