இலங்கையில் சடுதியாக உயர்வடைந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
நாட்டில் மேலும் 443 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினத்தில் இதுவரை 2,329 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாட்டில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 223,586 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கோவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2,031 பேர் இன்று குணமடைந்தனர். தொற்று நோய் தடுப்பு பிரிவால் நாளாந்தம் வெளியிடப்படும் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,136 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
