விவசாயிகளின் நலன் கருதி ஜனாதிபதி அநுர எடுத்த நடவடிக்கை! தேர்தலின் பின்னர் கிடைக்கும் தொகை
அதிகரிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான உர மானியத்தை இரண்டு கட்டங்களாக வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதிகரிக்கப்பட்ட உர மானியத்தை பொதுத் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னர் வழங்கப்படும் கொடுப்பனவு
இதன்படி, இதுவரை வழங்கப்பட்ட 15000 ரூபா உர மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனடியாக விடுவிக்கப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த பருவத்தில் உர தேவைக்கான பணத்தை விவசாயிகள் பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் அதிகரிக்கப்பட்ட 10000 ரூபா தொகையானது தேர்தலின் பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சாகுபடியை துவங்கும் விவசாயிகள் பிரச்சினையின்றி, உர மானிய தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்படுகின்றது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
