ஒவ்வொரு மேலதிக வேட்பாளருக்கும் அதிகரித்துள்ள தேர்தல் செலவு
ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டில் ஒவ்வொரு மேலதிக வேட்பாளரும் செலவுகளை ஏறக்குறைய 200 மில்லியன் ரூபாய்களால் அதிகரிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியலில் ஒவ்வொரு புதிய பெயரும் சேர்க்கப்படும்போது குறைந்தபட்சம் 200 மில்லியன் ரூபாய் செலவு அதிகரிக்கிறது.
வாக்குச் சீட்டின் நீளம்
இந்தநிலையில், தேர்தலுக்காக பயன்படுத்தும் அனைத்து நிதியும் இந்த நாட்டு மக்களுடையது.
எனினும் இதனை கவனத்தில் கொள்ளாது, பல வேட்பாளர்கள், ஊடகங்களின் கவனத்திற்காகவோ, எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்காகவோ அல்லது வேறு பலன்களைப் பெறுவதற்காகவோ தங்கள் வேட்புமனுவை அறிவிக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
அரச அச்சகத்தில் அச்சிடப்படும் வாக்குச் சீட்டின் அதிகபட்ச நீளம் 27.5 அங்குலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், பெயர்களை இரண்டு நெடுவரிசைகளில் அச்சிட வேண்டும்.
செலவின அதிகரிப்பு
இதற்காக மேலதிக வாக்குப் பெட்டிகள் தேவைப்படுவதோடு, அதன் மூலம் தொழிலாளர் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும்.
இருப்பினும் வேட்பாளர்களின் உண்மையான பார்வை அல்லது சித்தாந்தத்தை ஊக்குவிக்கும்போது, செலவின அதிகரிப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2024, வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 9 நிலவரப்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 27 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |