பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தீபாவளி முற்பணம்: அரசாங்கம் விசேட அறிவிப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு வெளியிட்ட ஊடகப் அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அரச பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த முற்பணம் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10000 ரூபா
இதற்கு முந்தைய வருடங்களில் 10000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணம் தற்போது 20000 ரூபாவாக வழங்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்களின் கொள்வனவுக்கான வாய்ப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முற்பணம் அதிகரிப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல், வனஜீவராசிகள், வனவள, பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதி அமைச்சிள் செயலாளர் பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கை செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு செய்யும் சக்தி குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையினை கவனத்திற கொண்டே, இந்த விசேட பண்டிகைக்கால கொடுப்பினை வழங்குவதற்கு தீர்மானித்ததாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்களினது விசேட பண்டிகையான தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் மலைநாட்டு தமிழ் பிரஜைகளை போன்றே முழு நாட்டிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
