அத்துமீறல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
இலங்கையில் பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல்களை முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றினையும் மின்னஞ்சல் முகவரி ஒன்றினையும் பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர்.
அதற்கமைய, 109 என்ற சிறப்பு தொலைபேசி எண் அல்லது cwb.on என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1000இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விசாரணை
இதன்படி, பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு எதிரான அத்துமீறல், வன்முறை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பான 1,077 முறைப்பாடுகள் 2024 ஜனவரி 04 முதல் மார்ச் 10 வரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில், 477 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், 42 முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 550 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |