கல்முனையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
கல்முனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து உள்ளூர் சுகாதார அதிகாரிகள் சில பகுதிகளை தனிமைப்படுத்தியுள்ளனர்.
கல்முனையின் சில பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட விரைவான என்டிஜென் சோதனைகளின் போது 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று மாலை கல்முனை செலான் வங்கி வீதி மற்றும் அதை ஒட்டிய வீதிகள் மூடப்பட்டன.
அத்துடன் இந்த வீதியை அண்டிய பகுதிகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
வாகனங்கள் இந்தப் பகுதிகளுக்குள் நுழைவது தடுக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்னர் கல்முனையில் உள்ள சாஹிரா கல்லூரி மற்றும் ரெஸ்ட் ஹவுஸ் வீதிக்கு இடையேயான வீதி மற்றும் அனைத்து புறவழிச்சாலைகளும் தனிமைப்படுத்தப்பட்டன.
அத்துடன் கல்முனை நகரசபை எல்லையில் உள்ள கல்முனை பிரதான வீதி உட்பட பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களும் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam