சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 690,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 14% வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, மார்ச் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ கடந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
கடந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 % வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் 53,111 சுற்றுலாப் பயணிகளும் , தொடர்ந்து இரண்டாம் வாரத்தில் 52,459 சுற்றுலாப் பயணிகளும் , மூன்றாம் வாரத்தில் 51,459 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மார்ச் மாதத்தில் 22 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று குறைவைப் பதிவு செய்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
