காலநிலை மாற்றத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கம்:மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தேசிய தொற்று நோயியல் சிகிச்சை பிரிவுக்கு பிரவேசிக்கும் சுவாச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,காலநிலை மாற்றமே தொற்று நோய்கள் அதிகரிப்பதற்கு காரணம்.உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், இது ஒருவரிடம் இருந்து மற்றையவருக்கு தொற்றும்.
பலருக்கு காய்ச்சல்
இந்த காலநிலை மாற்றத்தால் பலருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் காணப்படுகின்றது.
இதன்காரணமாக சளி, இருமல் மற்றும் தும்மல் என்பன காணப்பட்டால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களை கோருகின்றோம்.
எனவே, தொற்று நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்துகொள்வதற்கான வழிகாட்டுதல்களை மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
