பயணத்தடை காலத்தில் வீட்டு வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
பயணத்தடை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே மாதம் 25ம் திகதி இரவு 11.00 மணி முதல் இதுவரையில் வீட்டு வன்முறைகள் காரணமாக 160 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டு வன்முறைகளினால் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆண், பெண் என இரண்டு தரப்பினரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ,25 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, பயணத்தடை அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் திடீர் விபத்துக்கு உள்ளான 1339 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri