இலங்கைக்கு படையெடுக்கப் போகும் இந்தியர்கள்! மோசடி குறித்தும் தகவல் வெளியானது
ஆயிரக்கணக்கான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கிறேன் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போது நான் இந்தியாவில் கவனம் செலுத்தி வருகிறேன். ஏறக்குறைய 1.5 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நமது அண்டை நாடான இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடிந்தால் அது மிகவும் முக்கியமானது மற்றும் விமானக் கட்டணம் மிகக் குறைவு.
நமது கலாசாரத்திற்கும் இந்திய கலாசாரத்திற்கும் இடையில் நாம் ஊக்குவிக்கக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. எதிர்காலத்தில் இன்னும் தொடர்புகள் ஏற்படவுள்ளன. தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆயிரக்கணக்கான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கிறேன்.
சுற்றுலாப் பயணிகள் அலைக்கழிக்கப்படும் மோசடி
நாங்கள் ஜப்பானை இலக்காகக் கொண்டுள்ளோம், ஏனெனில் அந்நாட்டில் ஏராளமான உயர்தரப் பயணிகள் உள்ளனர். அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மத மற்றும் கலாசார நோக்கங்களுக்காக பயணிக்கின்றனர்.
இப்போது இலங்கையில் கலாசாரம் மற்றும் மதம் என்று வரும்போது வழங்குவதற்கு நிறைய விஷயங்கள் கிடைத்துள்ளன. சூரியனையும், கடலையும், மணலையும் விற்றுவிட்டு, சீகிரியா, தம்புள்ளை, அனுராதபுரத்தைக் காட்டுவதை மட்டும்தான் நாம் செய்து வருகிறோம். சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அலைக்கழிக்கப்படும் மோசடி முற்றிலும் தவறானது.
இது தொடர்பில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து எனக்கு நிறைய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவர்கள் இலங்கைக்கு வந்து இந்த இடங்களைப் பார்வையிடத் தயங்குகிறார்கள்.
சுற்றுலாப் பயணிகள் சூரியக் குளியல் அல்லது கடலுக்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் நாங்கள் அதிக கட்டணம் வசூலிக்கிறோம்.
நாம் பொருளாதார நெருக்கடியில் இருக்கலாம், ஆனால் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சுமைக்கு உள்ளாக்கப் போகிறோம் என அர்த்தம் கொள்ளக் கூடாது.
இதுபோன்ற சூழ்நிலைகளால் அவர்கள் இலங்கைக்கு வராது வேறு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்புக்கள் அதிகம். முதலில் இந்த மோசடிகள் நிறுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 18 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
