மீண்டும் அதிகரித்தது சீமெந்தின் விலை
சீமெந்தின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெற் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சீமெந்தின் புதிய விலை

இதன்படி, சீமெந்து பக்கெற் ஒன்றின் புதிய விலை 3200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருட்களின் விலையேற்றம் ஆகியன காரணமாக சீமெந்து பக்கெற்றுகளை பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்வதில் பாரிய அசெளகரியங்களையும், போக்குவரத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருவதாக சிமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.
சீமெந்து விலையேற்றம் காரணமாக வீடுகள், கட்டிடங்கள் நிர்மாணத் துறையில் ஈடுபடுவோரும் தமது தொழிற்துறையில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து பக்கெற் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து பக்கெற்றின் விலை 6 சந்தர்ப்பங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேபாளப் பெருவெள்ளம்: ஒரு மாதமாகியும் உறவினர்கள் குறித்து எதுவும் தெரியாததால் சோகத்தில் கனேடிய குடும்பங்கள் News Lankasri
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan