சீமெந்து விலை அதிகரிப்பினால் நிர்மாணத்துறை வீழ்ச்சியடையும் அபாயம்
சீமெந்து விலையை ஒரு மூட்டைக்கு 450 ரூபாவாக உயர்த்தினால் நிர்மாணத்துறை வீழ்ச்சியடையும் என இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
சீமெந்து மூட்டை ஒன்றின் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானம் இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும், விலை அதிகரிப்பின் பின்னர் ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் 3000 ரூபாவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கறுப்புச் சந்தை வியாபாரிகள் சீமெந்து விலையை கடுமையாக உயர்த்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சந்தையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சீமெந்து விலை உயரும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகளின் விலையும் உயரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.