தெற்காசிய நாடுகளில் இலங்கையில் தாய் மரணங்கள் அதிகரிப்பு
கோவிட் தொற்று நோய் காரணமாக சுகாதார துறை சீர்குலைந்துள்ளதால், தெற்காசிய நாடுகளில் சிறுவர் மற்றும் தாய் மரணங்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கோவிட் தொற்று நோய் நேரடியாக மற்றும் நேரடி அல்லாத வகையில் பாதிப்பு மற்றும் தெற்காசிய நாடுகளில் பதில் நடவடிக்கை என்ற அறிக்கைக்கு அமைய ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் சிறுவர் மற்றும் தாய் மரணங்கள் சுமார் 2லட்சத்து 39 ஆயிரம் நடந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நாடுகளில் இந்தியாவில் மாத்திரம் கடந்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு சிறுவர் மரணங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இது 15.4 வீத அதிகரிப்பு என கூறப்படுகிறது. பங்களாதேஷ் நாட்டில் சிறுவர் மரணங்கள் 13 சத வீதமாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் அதிகளவான தாய்மாரின் மரணம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 21.5 சத வீதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தாய் மரண வீதம் 21.3 வீதமாக அதிகரித்துள்ளது.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
