மீண்டும் பயணத் தடையா? சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனச் சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக நாளாந்தம் 500 தொடக்கம் 600 வரையான கோவிட் தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்த எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளது எனச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்படுமாக இருந்தால் மீண்டும் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டை தளர்த்திய பின்னர் மக்கள் பொறுப்பற்ற வகையில்
நடந்துகொள்கின்றனர் எனவும், இதனால் தொற்று நிலைமை மீண்டும் அதிகரிக்கும்
நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
