நெத்தலியாற்றங்கரை பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள்
தர்மபுரம் - நெத்தலியாற்றங்கரை பகுதியில் இரவு நேரத்தில் எவ்வித அனுமதியும் இன்றி பெறுமதியான பல மரங்கள் அழிக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டு வருவதுடன், சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வும் குறிப்பாக நெற்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் நிலங்களிலும் மணல் அகழ்வு இடம்பெறுவதாக இப்பகுதியில் வாழும் விவசாயிகள் கிராம அலுவலருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனடிப்படையில் இன்றைய தினம் (22.07.2025) தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம அலுவலர், கிராம பொது அமைப்புக்கள், கண்டாவளை பிரதேச செயலாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் இணைந்து நெத்தலியாறு பகுதியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்
இதன்போது தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில், இது போன்ற சட்டவிரோத செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருப்பதற்கு 0718592122 என்ற இலக்கத்தின் ஊடாக தம்மை தொடர்பு கொண்டு எந்தவித குற்ற செயல்கள் இடம்பெற்றாலும் உடன் தெரிவிப்பதன் மூலம் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முடியும்.
அத்துடன் இரவு வேளைகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா




