இலங்கையர்களுக்கு அடுத்தடுத்து விழும் அடி! மின் கட்டணமும் அதிகரிப்பு
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
இதற்கு பதிலளித்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் எனவும், இதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக பொருட்களின் விலை ,எரிப்பொருட்களின் விலை,தங்க விலை என்பன தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தற்போது மின் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படவுள்ளமை குறித்து மக்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் A B C D E F G H I J K L ஆகிய வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள், இரண்டரை மணிநேரம் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அதேநேரம், P Q R S T U V W ஆகிய வலயங்களில், முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில், ஒரு மணி நேரமும்,
மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



