இலங்கையில் திடீரென அதிகரித்த மின்சார தேவை! அதிகூடிய வீதம் பதிவு
நாட்டுக்கான மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் நேற்று முன்தினம் ஒரு நாளுக்கான அதி கூடிய மின்சார தேவை பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அனல் மின் நிலையங்களும் உபயோகப்படுத்தப்படும்
நாட்டின் தேவைக்கு ஏற்ப நேற்று முன்தினம் நிகர மின் உற்பத்தி 49.53 கிஹா வோட்டாக பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நேற்றைய மின் தேவை 50 கிஹா வோட்டையும் தாண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மின்சார தேவை அதிகரிப்பை கவனத்திற் கொண்டு அம்பாந்தோட்டையில் அண்மையில் நிறுவப்பட்ட டீசலில் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் உட்பட மின்சார சபைக்கு சொந்தமான அனைத்து அனல் மின் நிலையங்களும் மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.