இந்தியாவில் அதிகரித்துள்ள சீனாவின் ஆக்கிரமிப்பு! ராகுல் எம்.பி. கண்டனம்
புதுடில்லி - லடாக் மற்றும் உத்தர்கண்டில் சீன இராணுவத்தினர் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி உத்தர்கண்டின் பரஹோட்டி செக்டார் பகுதியில் 100 சீன இராணுவ வீரர்கள் ஊடுருவியுள்ளதாகவும், சில மணி நேரம் அந்த இடத்தில் தங்கியிருந்து பின்னர் அங்கிருந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில்,லடாக் பிரச்சினை காரணமாக இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சீனா பிளஸ் பாகிஸ்தான் பிளஸ் 'மிஸ்டர் 56 இஞ்ச்' இந்தியாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது என காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஹிந்தியில் டுவிட்டர் பதிவொன்றினையும் இட்டுள்ளார்.
चीन + पाकिस्तान + Mr 56”
— Rahul Gandhi (@RahulGandhi) October 3, 2021
=
भारत भूमि पर बढ़ता चीनी क़ब्ज़ा।#Ladakh #Uttarakhand pic.twitter.com/7rel1NFE6M
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri