இலங்கையில் அதிகரிக்கும் சிறுவர் புற்றுநோயாளர்கள்!
நாட்டில் ஓராண்டு காலப்பகுதிக்குள் மொத்தம் 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சூரஜ் பெரேரா இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், சிறுவர் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தடையின்றி வழங்குவதற்காக சுகாதார அமைச்சருடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆலோசனை
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது, சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சைகளைப் பெறவும், சிகிச்சையின் முடிவுகளைச் சாதகமாக மாற்றவும் மிக முக்கியமான காரணியாக அமைகிறது என்று சுட்டிக்காட்டினார்.

பிள்ளைகளிடம் தொடர்ச்சியான அல்லது வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டுமெனவும் காலதாமதம் இன்றி சிகிச்சையைத் தொடங்குவது குழந்தைகளின் உயிரைக் காக்க உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று ஆண்டுத் திட்டமானது நாட்டின் சிறுவர் புற்றுநோய் பராமரிப்புச் சேவைகளை வலுப்படுத்தும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய ஆறுதலாக அமையும் என்றும் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri