சுதந்திரபுரத்தில் முழுமை பெறாத நெல் காய்தளம் - விவசாயிகள் விசனம்!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு கமநலசேவைத் திணைக்களத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் விவசாயிகளின் அறுவடை செய்யும் உற்பத்தி பொருட்களை காய விடுவதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு 1.3 மில்லின் ரூபா செலவில் நெல்காய்தளம் ஒன்று அமைக்கப்பட்டு அது இன்னும் முழுமை பெறாத நிலையில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
நெற்செய்கையாளர்கள் மற்றும் மேட்டுநில பயிர்செய்கையாளர்கள் இந்த காய்தளத்தினை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
நெல் சீசன் காலத்தில் நெல் உலர விடுவதும் மற்றும் மேட்டுநில பயிர்களான கச்சான், பயறு, உளுந்து போன்ற அறுவடையின் பின்னர் அவற்றை உலரவிடுவதற்குமாக விவசாயிளுக்காக இந்த காய்தளம் அமைத்துகொடுக்கப்பட்ட போதும் காய்தளத்தின் ஒப்பந்ததாரர்களுக்கு முழு நிதியும் விடுவிக்கப்பட்ட போதும் காய்தளம் சரியாக செப்பனிடப்படவில்லை என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
பாரியளவில் நட்டம்
இந்த காய்தளத்தினை நம்பி விவசாயி ஒருவர் நிலக்கடலையினை காயவைத்துள்ளார். நேற்று இரவு மழைபெய்துள்ளது. இதனால் தறப்பாள் கொண்டு நிலக்கடலையினை மூடியும் காய்தளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சரியாக நீர்வடிந்தோடக் கூடிய வகையில் வேலை முழுமைபெறவில்லை எனவும் இதனால் தனது விவசாய அறுவடைக்கான நிலக்கடலை மழை வெள்ளத்தில் நனைந்துள்ளதால் பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரபுரம் கமக்கார அமைப்பின் தலைவர் ஐ.துரைச்சுவாமியிடம் கேட்டபோது குறித்த காய்தளம் அமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆனாலும் காய்தளத்தின் நிலம் சரியாக சீர்செய்யப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு இது தொடர்பில் பலதடவைகள் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
