நாட்டில் மாணவி உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் பாடசாலை மாணவி உட்பட இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இருவரும் இன்று புதன்கிழமை (06.3.2024) மயங்கி விழுந்து உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி என்றும் மற்றவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் என தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவி
கலவான மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் புதன்கிழமை (06) தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

கலவான பிரதேச பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் இமல்கா சட்சராணி என்ற 13 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கடைக்குச் சென்று திரும்பும் போது திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார் என மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
எதிரிசூரிய ஆராச்சி, பன்னிபிட்டிய ஆரவல பகுதியைச் சேர்ந்த டெரன்ஸ் ஆனந்த எரிசூரிய (60) என்பவரே தனிப்பட்ட தேவைக்காக மஹரகம நகருக்கு அருகில் உள்ள சந்தைக்குச் சென்றிருந்த சமயமே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri