மக்களால் நிராகரிக்கபட்டவர்களுக்கு தேசிய பட்டியலில் இடமளிக்க கூடாது.
தேர்தலில் தோல்வி அடைந்த அரசியல்வாதிகளுக்கு கட்சி தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்கக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமணன் சஞ்சய் வலியுறுத்தியுள்ளார்.
29 பேரடங்கிய தேசியப் பட்டியல் ஆசன வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ளவர்களுக்கு இடமளிப்பதே ஏற்புடையதாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தேசியப் பட்டியல்
' மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் அழைத்துவருவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.

அது மக்கள் மத்தியில் கட்சிமீது அதிருப்தி அலையை உருவாக்கும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர்.
எனவே, தற்போதும் பழைய பாணியில் அரசியல் நடத்த முற்படக்கூடாது. தூய்மையான அரசியல் வேண்டுமெனில் மக்கள் நிராகரித்தவர்களை ஒதுக்க வேண்டும்.
அவர்களுக்கு தேசிய பட்டியல் ஊடாக பதவி வழங்கப்படக்கூடாது." - எனவும் லெட்சுமணன் சஞ்சய் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam