11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பிலான வழக்கு பெப்ரவரி மாதம் விசாரணைக்கு
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கே இவ்வாறு பெப்ரவரி மாதம் 19ம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படை உத்தியோகத்தர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த வழக்கினை விசாரணை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் நிலைமைகளினால் வழக்கு விசாரணை செய்யப்படாத நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்க்பபட்டுள்ளது.