புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியாவில் திறந்து வைப்பு
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா(Vavuniya) மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அண்மையில் இன்று (16.07.2024) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வானது கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அங்கத்துவ கட்சிகள்
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் உருவச்சிலையினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
