பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 8 இராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில்(Pakistan) உள்ள கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள இராணுவ படைத்தளம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் இராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை
இதன்போது பயங்கரவாதிகள் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு வாகனத்தை இராணுவ படைத்தள வளாகத்தின் மீது மோதியமையினால் அந்த வளாகத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 8 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததோடு தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயங்கரவாத தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் சரியான நேரத்தில் தக்க பதிலடி கொடுத்ததால் பெரும் பேரழிவு தடுக்கப்பட்டதோடு, விலைமதிப்பற்ற அப்பாவி உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இதில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் அனைத்து பயங்கரவாதிகளும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர செயலை ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் ஹபீஸ் குல் பகதூர் அமைப்பு நிகழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் இந்த அமைப்பு கடந்த காலங்களில் பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்தியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முகநூல் நேரலைக்கு தடை : ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |