மட்டக்களப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அலுவலகம் திறந்து வைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அலுவலகம் நேற்று (04) மாலை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் திறந்துவைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச(Sajith Premadasa) பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
பொதுமக்களின் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் இந்த அலுவலகம் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வுீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் டி.தயானந்தனின் அழைப்பினை ஏற்றுவந்த எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தினை திறந்துவைத்ததுடன் கட்சி ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடினார்.
எதிர்காலத்தில் மட்டக்களப்பு வருகைதரும் போது கட்சி அலுவலகத்திற்கு வருகைதந்து ஆதரவாளர்களை சந்திப்பதாக இதன்போது அங்கு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
இதன்போது பொதுமக்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய எதிர்க்கட்சி தலைவர் பொதுமக்களின் கோரிக்கை கடிதங்களையும் பெற்றுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
