அமெரிக்கா வாழ் இலங்கை சிறுவனின் நெகிழ்ச்சியான செயல்
அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த சிறுவனின் நெகிழ்ச்சியான செயற்பாடு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
11 வயதான சானுஹக் பின்னவலகே என்ற சிறுவன், இலங்கையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்து வருகிறார்.
அமெரிக்காவில் வாழும் சானுஹக், ஜனாதிபதி ஜோ பைடனிடமிருந்து சமூக சேவைக்கான தங்க விருது பெற்றுள்ளா்.
தங்க விருது
அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட பேச்சு போட்டியில் சனுஹக் பின்னவலகே முதலாம் இடத்தைப் பெற்றார்.

விருதின் மூலம் தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு, இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளார்.
சேவை மனப்பான்மை
மாணவர்களுக்கு பொருட்களை வழங்கும் நோக்கில், இலங்கைக்கு வந்துள்ளார். சனுஹக் பின்னவலவின் பெற்றோர் அமெரிக்காவில் வைத்தியர்களாகப் பணி புரிகின்றனர். அவர்கள் முன்னர் கொழும்பு மாலம்பேயில் வசித்து வந்துள்ளனர்.

11 வயதான சனுஹக் சிறிய வயதில் சேவை மனப்பான்மையுடன் செயற்படும் விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் வசூல் விவரம்.. 23 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri