மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவு திறந்து வைப்பு
இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (04) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்ஜனி கணேசலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து சிறப்பித்தார்.
4 சத்திர சிகிச்சைக் கூடங்கள்
நிகழ்விற்கு விசேட விருந்தினர்களாக சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித்த குணரத்ன மகிபால, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சுமார் 320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத் தொகுதியில் 4 சத்திர சிகிச்சைக் கூடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் லப்பர் பந்து புகழ் நடிகர் தினேஷ்... வெளிவந்த ஜோடியின் போட்டோஸ்... Cineulagam