சுஜீவ சேனசிங்கவின் கொள்ளுப்பிட்டி வீட்டில் திடீர் சோதனை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின்(Sujeewa Senasinghe ) கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை தொடர்பில் பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தான் வீட்டில் இல்லாத போது பொலிஸ் குழு என கூறிக்கொண்டு சிலர் தனது வீட்டை சோதனையிட்டதாக குற்றம் சுமத்தி சுஜீவ சேனசிங்கவினால் குருந்துவத்தை பொலிஸில் முறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் உண்மையாகவே பொலிஸ் அதிகாரிகளா என்பதை கண்டறியுமாறும் முறைப்பாட்டின் மூலம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுஜீவ சேனசிங்க
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின்(Sujeewa Senasinghe )கொள்ளுப்பிட்டியில் உள்ள வீட்டுக்கு, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் சென்று இன்று(05.11.2024) அவசர சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய சீருடைகளின் பாகங்கள் மற்றும் வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் நோக்கில் சோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற அனுமதி
நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட அனுமதியின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழு சென்று சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகள் குழு வீட்டிற்குச் சென்றபோது சுஜீவ சேனசிங்க வீட்டில் இல்லை எனவும், வேலைக்காரர் மட்டும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த தேடுதல் நடவடிக்கைகள் இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு ஊழியரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan