இலங்கையில் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு கோடி ரூபாய் அபராதம்: அதிர்ச்சியளிப்பதாக கூறும் ஸ்டாலின்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாட்டின் கடற்றொழிலாளர்களையும் அவர்களது கடற்றொழில் படகுகளையும் விடுவிக்கவேண்டும் என்று கோரி, முதலமைச்சர் ஸ்டாலின், மீண்டும் ஒருமுறை மத்திய வெளியுறவு அமைச்சரை கோரியுள்ளார்.
அத்துடன், தமிழ் நாட்டின் கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
1.5 கோடி ரூபாய் அபராதம்
எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 12 பேருக்கு தலா 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்தே, ஸ்டாலினின் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
இந்தநிலையில், விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இலங்கை நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த தண்டனை அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
