விரைவில் மீன்களையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்! அமைச்சர் ஹந்துன்னெத்தி
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார்.
பொருளாதாரம் வீழ்ச்சி
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தரத்தில் மீன் உற்பத்தி செய்வது குறித்த தெளிவின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காடடியுள்ளார்.
கொள்ளைககளின் மூலம் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தவர்கள் தற்பொழுது பொருளாதாரம் பற்றி தம்மிடம் கேள்வி எழுப்பி வருவதாகவும் அதில் பயனில்லை எனவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இந்த யதார்த்தம் கசப்பானது என்றாலும் அதனை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
