அனுமதி பெறுவது கட்டாயம்! வெளியான முக்கிய அறிவிப்பு
தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அதற்கான அனுமதியை பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2023 மரம் தறித்தல் சட்டத்திற்கமைய தென்னை மரம் தறித்தலின் போது அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் பெறுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அபராதம்
உரிய அனுமதியின்றி தென்னை மரம் தறிப்பவர்களுக்கு 6 மாதம் சிறைச் செல்ல நேரிடும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மரம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாவை அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அறியாமை காரணமாக அனுமதியின்றி மக்கள் தென்னை மரம் தறித்தலில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
