முன்னாள் நீதிபதி இளஞ்செழியனின் மண்ணில் அநுரவின் முன் கண்ணீர் சிந்திய மக்கள்
யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘பொங்கல் சங்கமம் – 2026’ நிகழ்வு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்துகொண்டார். அன்றைய நிகழ்வின்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது யாழ். மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிறிதளவேனும் வீழ்ச்சியடைய இடமளிக்காது எனவும் இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்க தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு முற்படுபவர்களுக்கு இடமளிக்கமாட்டோம், இனவாதம் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை அநுரவுக்கு யாழ்ப்பாண மக்கள் கொடுத்த வரவேற்பானது தற்போது பேசு பொருளாகவும் மாறியுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |