ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் 10 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றால் பலி
ஒகஸ்ட் மாதத்தில் மட்டும் பத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கோவிட்19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் 27 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பலர் கோவிட் நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த ஒகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரையில் கித்துல்கல, கலஹா, தெமட்டகொட, காலி, முகத்துவாரம், உடுகம, அம்பன்பொல, தேசிய பொலிஸ் பயிற்சி நிலையம், மட்டக்களப்பு மற்றும் கேகாலை பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பிரதம பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் பரிசோதகர், 6 உப பொலிஸ் பரிசோதகர்கள், 13 பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் 6 பெரிலஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



