முகநூலில் தனக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டமைக்கு ஐம்பது மில்லியன் நஷ்டஈடு கேட்ட எம்.பி
முகநூல் ஊடாக, தனக்கு அவமானம் ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவிட்டமைக்கு எதிராக ஐம்பது மில்லியன் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என கோரி, தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof )சம்பந்தப்பட்டவருக்கு நேற்றையதினம்(18) அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கோரிக்கை கடிதத்தில்,மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
குறிஞ்சாக்கேணி, கிண்ணியா எனும் விலாசத்தினை வசிப்பிடமாக கொண்ட, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அறிவுறுத்தலுக்கமைவாக இக்கோரிக்கைக்கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது.
அரசியல் எதிர்காலம்
எனது கட்சிக்காரர் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.
தாங்கள் முகப்புத்தகத்தில் 2025.06.25 அன்றோ அல்லது அதற்கண்மித்த திகதியொன்றிலோ எனது கட்சிக்காரர் தொடர்பில், மக்களை பிழையாக வழி நடாத்தியும், மக்களுக்கு தவறான புரிதலை உருவாக்கும் விதத்திலும், திட்டமிட்டு முகப்புத்தகத்தில் பதிவொன்றினை செய்துள்ளீர்.
இதன்மூலம் எனது கட்சிக்காரரின் அரசியல் எதிர்காலத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தி, அவருக்கு இருக்கும் நன்மதிப்பில் களங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளீர்.
இதன் விளைவாக சமூகத்தின் மத்தியில், எனது கட்சிக்காரருக்கு ஈடு செய்ய முடியாத அவதூற்றினையும் இழுக்கினையும் தங்களுடைய பதிவு ஏற்படுத்தி உள்ளது என்பதை உங்களின் கவனத்திற்கு அறியத் தருகின்றேன்.
ஐம்பது மில்லியன் நஷ்டஈடு
எனவே, இதன் மூலம், எனது கட்சிக்காரருக்கு பாரிய மன உழைச்சல் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, அவரது கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் கலங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என்பதால், எனது கட்சிக்காரருக்கு ரூபா ஐம்பது மில்லியன் (ரூபா. 50,000,000.00) செலுத்த வேண்டும் என்றும், குறித்த இழப்பீட்டு தொகையினை இன்றைய தினத்தில் இருந்து ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றீர்கள்.
தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக எந்தவிதமான முன்னறிவித்தலின்றி திருகோணமலை நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்து குறித்த பணத்தொகையினையும் வழக்கு செலவினையும் தங்களிடமிருந்து கோர வேண்டிவருமென மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
எதிராக சட்ட நடவடிக்கை
இது குறித்து, இம்ரான் மகரூப் கருத்து கேட்டபோது,
குச்சவெளி ,புல்மோட்டை பிரதேச ACMC முக்கியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன்.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ACMC க்கு ஆதரவு வழங்காத காரணத்தால், குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில ACMC முக்கியஸ்தர்கள் மற்றும் சில ACMC ஆதரவாளர்கள் எனக்கு சமூக வலைத்தளம் ஊடாக மேற்கொண்ட தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக எனது சட்டதரணி ஊடாக சட்டநடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.





Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
