நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை சீர்ப்படுத்த நடவடிக்கை
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகள் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தும் வகையில், பயணிகளுக்கு சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் மற்றும் மத்திய மாகாண போக்குவரத்துச் சபை அதிகாரிகள் பேருந்து சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நுவரெலியா பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் தனியார் பேருந்துகள், இன்று(07.09.2026) நுவரெலியா பிரதேச போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் சாலை ஆய்வாளர்களால் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
பயணிகள் பாதுகாப்பாக ஏறி
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் பேருந்து சேவைகளை மேலும் ஒழுங்குபடுத்தி, பயணிகளுக்கு பயனுள்ள போக்குவரத்து சேவையை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் பேருந்துக்காகக் காத்திருக்கும் போது முறையான வரிசையைப் (Queue) பின்பற்றுதல், பேருந்தை அதற்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடப் பெட்டிக்குள் சரியாக நிறுத்த வேண்டும்.
வீதியின் நடுவில் நிறுத்தக் கூடாது, பயணிகள் பாதுகாப்பாக ஏறி, இறங்கும் வரை பேருந்தை முழுமையாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும், பேருந்தில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஒலியெழுப்பிகள் (Horns) மற்றும் அதிக சத்தம் எழுப்பும் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடுமையான சட்ட நடவடிக்கை
பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துகள் உரிய முறையில் சென்று கொடுக்கப்பட்டுள் ள நேரத்தில் தரித்து நின்று, அங்கு காத்திருக்கும் பயணிகளை ஏற்றிச் செல்வதுடன், பயணிகளுக்குத் தேவையான சரியான பயணத் தகவல்கள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்து தரிப்பு நிலையங்களுக்கு வெளியே பயணிகளை ஏற்றிச் செல்வதைத் தவிர்த்து, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருத்திற்கொள்ளவு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட அனைத்து அறிவுறுத்தல்களுக்கு இணங்கிச் செல்லத் தவறும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


