இலங்கைக்கு IMF விதித்துள்ள கடும் நிபந்தனைகள் - கடன் வசதி தொடர்பில் வெளியான தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் கடைசித் தவணையை விடுவிக்க நிபந்தனைகள் விதிப்பு இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின், கடைசித் தவணையை விடுவிக்க சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடைசித் தவணைக்கு உரித்தான 345 மில்லியன் டொலர் மதிப்பிலான 7வது தவணையை விடுவிக்கப்பட வேண்டுமானால், குறித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இலங்கைக்கும் இடையே 7வது மறுஆய்வு தொடர்பாக எட்டப்பட்ட பணியாளர் - நிலை ஒப்பந்தத்திற்கு, IMF நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெறுவதற்கு இரண்டு முக்கியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் IMF கூறப்பட்டுள்ளது.
பணியாளர்-நிலை இணக்கப்பாடு
அதன்படி, திட்ட வரையறைகளுக்கு இணங்க 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதும், வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பான நிதி உத்தரவாதங்களின் மறுஆய்வை வெற்றிகரமாக முடிப்பதும் இதில் உள்ளடங்கும்.

நிர்வாகக் குழுவின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், 7வது மறுஆய்வு தொடர்பாக நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், இலங்கை சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதிகளைப் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 அன்று, IMF குழு 7வது மறுஆய்வு குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, அப்போது பணியாளர்-நிலை இணக்கப்பாட்டை (Staff-Level Agreement) எட்டுவதற்காகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் IMF தெரிவித்துள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri