இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
நாட்டில் அமுலிலுள்ள பயண கட்டுப்பாட்டு தளர்வுக்கு பின்னர் மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தெமடகொட பகுதியில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது.
இந்த வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்ட பகுதி சனநெரிசல் அதிகம் உள்ள பகுதியாகும். அங்குள்ளவர்களில் அதிகமானோர் சுத்திகரிப்பு பணியாளர்களாக இருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் திரிபு நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் பரவக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. குறிப்பாக மேல் மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் பரவி வரும் டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தெமட்டகொட - ஆராமய பகுதியில் மேலும் 15 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
டெல்டா கொவிட் திரிபானது இலங்கையில் தற்போது பரவி வரும் B 117 வைரஸ் திரிபை விட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
