ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை தொடர்பில் வெளியான முக்கிய அறிக்கை
காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் வெளிநாட்டு அரசுகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கனடா விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி தேர்தல் செயல்முறைகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை(Public Inquiry Into Foreign Interference in Federal Electoral Processes and Democratic Institutions') என்ற தலைப்பில் 123 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் குறித்த தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்த 2023ஆம் ஆண்டு கொல்லப்பட்ட காலிஸ்தான் அடைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகீர் குற்றச்சாட்டுகளைச் முன்வைத்திருந்தார்.
இந்தியா வலியுறுத்து
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த இந்தியா, ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்தியது.

இதனால் இரு நாட்டு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இரு நாடுகளும் தங்கள் தூதர்களையும் கூட திரும்பப்பெற்றுக்கொண்டன.
இதன்படி நிஜ்ஜர் கொலை தொடர்பாக விசாரிக்கக் கனடா நாட்டின் அரசே ஆணையம் ஒன்றை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri