தாமரை கோபுர சம்பவம்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
தாமரை கோபுரத்தில் இருந்து பாடசாலை மாணவியொருவர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தினையடுத்து பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மனநலத்தில் அதிக கவனம் செலுத்துமாறு மனநல வைத்தியர் ஆலோசகர் சமன் வீரவர்தன அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல இளம் பருவத்தினர் மன அழுத்திலிருக்கும் போது அது குறித்த அறிகுறியைக் காட்டாமல் தனிமையில் போராடுவதாகவும் அதன் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
அறிகுறிகள்
"நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து விலகிச் செல்வது, திடீர் மனநிலை மாறாட்டங்கள் போன்ற அவர்களின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் அறிந்துகொள்வது முக்கியமானது” என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்திருக்கும் சோகம் அல்லது எரிச்சல், பொழுதுபோக்குகள் அல்லது பிறருடன் பழகுவதில் ஆர்வமின்மை மற்றும் தூக்க முறைகளில் மாற்றம், பசியின்மை அல்லது கல்வி செயல்திறன் ஆகியவற்றில் திடீர் மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நம்பிக்கையற்ற உணர்வு அல்லது வாழ்க்கையில் இருந்து தப்பிக்க விரும்புவது அல்லது அதிலிருந்து ஒழிந்து கொள்ளல் போன்ற பேச்சுக்கள் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். “பிள்ளைகளுடன் திறந்த தொடர்பைப் பேணுவதும் இன்றியமையாதது.
அவசர இலக்கம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளைப் பற்றி பேசுவதற்கு பாதுகாப்பாக உணரும் சூழலை உருவாக்க வேண்டும்,” “பதின் பருவ வயது மிகவும் கடினமானது. பல வாலிபப் பருவத்தினர் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள், பெற்றோர்கள் சீக்கிரம் அடியெடுத்து வைக்கவில்லை என்றால், அவர்களுடைய பிள்ளைகள் சமாளிக்க முடியாமல் திணறுவார்கள்.
” எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இதுபோன்ற அறிகுறிகளைக் கண்டால், வைத்திய நிபுணரிடம் அல்லது '1926' என்ற அவசர அழைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
