பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தன்சல் வழங்குநர்களுக்கு முக்கிய அறிவிப்பு
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அன்னதான சாலைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வேண்டுகோள் ஒன்றை தானசாலை ஏற்பாட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோரிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ளது.
இதன்படி, தன்சல் எனப்படும் தானசாலைகளில் உணவு மற்றும் பானங்களை வழங்கும் போது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
டெங்கு நோய் அபாயம்
சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் பைகளில் சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்றும், இது குறித்து அதிக கவனம் செலுத்திச் செயலாற்றுமாறும் தன்சல் ஏற்பாட்டாளர்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தற்போது பெரும் தொற்று நிலையை எட்டியுள்ள டெங்கு நோய் நிலைமை குறித்தும் அவதானம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பானங்களை வழங்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி, அவற்றை உரிய முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam