பிரித்தானியாவின் விமான பயணிகளுக்கு வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்பவர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு வருவதால் அநாவசியமாக விமான நிலையத்தில் தாமதத்தை சந்திக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வெடிமருந்துள்ள பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய அல்லது தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பார்ட்டி பொப்பர்கள்(party poppers) இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
எயார் பிரான்ஸ்(Air France) எயார் இந்திய(Air India) அமெரிக்கன் எயார்லைன்ஸ்(American Airlines) டெல்டா எமிரேட்ஸ்(Delta Emirates) எதிஹாட்(Etihad) கேஎல்எம்(KLM) லுப்தன்சா(Lufthansa) லக்ஸ்எயார்(Luxair) கட்டார் எயார்வேஸ்(Qatar Airways) ரயன்எயார்(Ryanair) சுவிஸ் எயார்லைன்ஸ்(Swiss Airlines) விஸ் எயார்(Wizz Air) ஆகிய நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் பட்டாசுகளை முழுமையாக தடை செய்துள்ளன.
மேலும், விமானத்தில் செல்லும் போது, பொதிசெய்யப்பட்ட பரிசுப்பொருட்கள், பொம்மை துப்பாக்கிகள், நீர் கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைப் போல தோற்றமளிக்கும் பொம்மைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், இறைச்சி மற்றும் சட்னி வகைகள் போன்ற உணவுப்பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
