வவுனியா மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள முக்கிய அறிவிப்பு
சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என கூறிக்கொண்டு, வீடுகளில் சோதனை என்ற பெயரில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ள நிலையில், இச்சம்பவங்கள் தொடர்பாக, வவுனியா பொலிஸார் பொது மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
தங்களை அரச புலனாய்வாளர்கள் அல்லது பொலிஸார் என கூறிக்கொண்டு வீடுகளுக்கு விசாரணை என்ற பெயரில் வரும் நபர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸ் சீருடை இல்லாமல் விசாரணை என்ற பெயரில் வருபவர்களை, வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு விசாரணை என்ற பெயரில் சிவில் உடையில் வரும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து தங்களுக்கு அறிவிக்குமாறு 024-2222222, 024-2222226, 071-8591343, 072-9977302, 071-4716286 ஆகிய இலக்கங்களை வழங்கியுள்ளனர்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan