இலங்கையிலுள்ள சிங்கள மக்களுக்கு காலிமுகத்திடலில் இருந்து வந்த அறிவுறுத்தல் (Video)
இனவாத செயல்கள் தொடருமாக இருந்தால் இலங்கை எந்த காலத்திலும் நிமிர முடியாது என வடக்கு, கிழக்கிற்கான மக்கள் போராட்ட இயக்கத்தை சேர்ந்த ராஜ்குமார் ரஜிவ்காந்த் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - காலிமுகத்திடல் பகுதியில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பௌத்த பிக்குகளின் ஆர்ப்பாட்டத்தின் போது 13ஆவது திருத்தச் சட்டம் எரிக்கப்பட்டது. 13ஆவது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு குறைந்த பட்ச அதிகாரத்தை வழங்கக்கூடிய ஒரு திருத்தச் சட்டம்.
தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு திருத்தச் சட்டம். அந்த அதிகாரத்தை கூட வழங்கக் கூடாது என நினைக்கின்ற இந்த இனவாத கூட்டம் எதை வழங்கப் போகிறது.
ஒரு அரசியலமைப்பை கொண்டு சென்று நாடாளுமன்றத்திற்கு முன்னாள் எரிப்பது முற்றுமுழுதான இனவாத செயல். இந்த இனவாத செயல்கள் தொடருமாக இருந்தால் இந்த நாடு எந்த காலத்திலும் நிமிர முடியாது.
எரித்து எரித்து இந்த நாட்டை நாசமாக்கியுள்ளார்கள் என்பதை சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 5 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
