எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கு அவசர அறிவுறுத்தல்! இன்று முதல் புதிய நடைமுறை
இலங்கையில் எரிபொருள் கொள்வனவு செய்யும் பொது மக்களுக்கு பொலிஸார் அவசர அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.
இந்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடக பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வழங்கியுள்ளார்.
எரிபொருள் சேமிப்பு
அதன்படி வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எரிபொருளுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக இவ்வாறு வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதனை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் பரிதாபமான முறையில் கணவன், மனைவி பலி - பொலிஸார் வெளியிட்ட காரணம் |
புதிய நடைமுறை
இதேவேளை இன்று முதல் எரிபொருள் கொள்வனவில் புதிய நடைமுறையொன்று செயற்பாட்டிற்கு வரவுள்ளது.
அதன்படி, எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான துண்டு சீட்டை இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த பணியினை முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன், எரிபொருளை விநியோகிக்கும் புதிய முறைமையின் அடிப்படையில், வாகன உரிமையாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
கிராம அலுவலர்கள், விவசாயம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக இவ்வாறு பதிவு செய்யப்படவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.