கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, திங்கட்கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட அலுவலக பிரிவு ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடவுச்சீட்டு பெற புதிய வசதி

அதிக கடவுச்சீட்டு கோரிக்கை காரணமாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் சேவையை பெற கடினமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கடவுச்சீட்டு பெறுவதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புதிய அலுவலக பிரிவு
இதனால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய அலுவலக பிரிவு ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam